ONLINE JOBS FOR STUDENTS

நீங்கள் பாடசாலை செல்லும் மாணவர் எனின் இப்பகுதி உங்களுக்கு உகந்ததல்ல என்றே கருதுகிறோம். பாடசாலையில் படிக்கும் போது படிப்பிலேயே அதிகம் அக்கறை காட்ட வேண்டும், பணம் சம்பாதிப்பதில் படிப்பிலுள்ள உங்கள் கவனம் சிதைந்துவிடக்கூடாது. எனினும் இது பற்றிய உங்கள் அறிவை விருத்திசெய்யும் நோக்கில் இப்பகுதியை நீங்கள்பார்வையிடலாம். பாடசாலை செல்லும் நீங்கள் இப்போதே இந்த விடயத்தில் ஆர்வம்கொள்ளக்கூடாது என்பதே எமது வேண்டுகோள். 

Related image

ஒரு மணித்தியாலத்தில் 100 டாலர்கள் அல்லது ஒரு நாளில் 1000 டாலர்கள் இணையத்தில் சம்பாதிக்கலாம் என்று யாராவது கூறினால் அது பொய்யான கருத்தாகும். முதலில் இவ்வாறு கூறி உங்கள் பணத்தை கொள்ளையடிக்கக் காத்திருக்கும் கும்பல்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் இல்லை. அதற்கு நீங்கள் நிறையவற்றை படிக்க வேண்டும். நீங்கள் பணம் சம்பாதிக்க தேர்ந்தெடுக்கும் துறையில் அண்ணளவான தேர்ச்சியும் வேண்டும். சாதாரண கணனி அறிவைத்  தாண்டி உங்கள் கணனி அறிவை நீங்கள் விருத்தி செய்துகொள்ளவேண்டும். இவை அனைத்தையும் செய்ய உங்கள் ஆங்கில அறிவையும் நீங்கள் சற்று விருத்திசெய்ய வேண்டியேற்படலாம்.

எனினும் இதனை சரியாகக் கற்று சரியான முறையில் செய்துவந்தீர்கள் என்றால், ஆம் காலப்போக்கில் இது உங்களுக்கு ஒரு இலகுவான விடயம் ஆகிவிடும். எனினும் மேலே கூறியதுபோல் மணிக்கு 100 டாலர்கள் அல்லது  ஒரு நாளைக்கு 1000 டாலர்களை சம்பாதிப்பது என்பது எமது நாடுகளில் நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. இணையத்தில் வேலைத்தருவதாகக் கூறி பணத்தை சுருட்டும் ஸ்கேம் ( Scam) இணையதளங்களே அதிகமாக உள்ளன. எனவே இதுபற்றி கவனமாக இருத்தல் வேண்டும். 

Related image

கீழே இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற சில வீடியோக்களை உங்களுக்காக YouTube இல் இருந்து பகிர்ந்துள்ளோம். இப்போதைக்கு இந்த வீடியோக்கள் மூலம் இணையத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது பற்றிய உங்கள் அறிவை விருத்திசெய்துகொள்ளுங்கள். 

இது பற்றிய விரிவான கட்டுரை விரைவில்...