Latest Updates

ஊழிநாள் கடிகாரம் (Doomsday Clock) பற்றித் தெரியுமா?


ஊழிநாள் கடிகாரம் (Doomsday Clock) என்பது 1947 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்கான சிக்காககோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்கள் செய்திமடல் பணிப்பாளர் சபையினால் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.

இக்கடிகாரத்தில் மணிகூட்டின் நேர முட்கள் நள்ளிரவை நெருங்குவது உலகம் பேரழிவை நெருங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் அணுசக்தி மற்றும் இயற்கையை முறைதவறிப் பயன்படுத்தியதன் பலாபலனாக இது நோக்கப்படுகின்றது. அண்மையில் (கடந்த 10.01.2012இல்)இதைப் பராமரிக்கும் விஞ்ஞானிகள் இக்கடிகாரத்தின் நேரத்தை ஒரு நிமிடத்தால் முன்னேற்றி நள்ளிரவுக்கு 5 நிமிடங்கள் முன்னோக்கி வைத்ததாக (பி.ப11:55)  அறிவித்தனர். உலகில் நிகழ்ந்த மனித இருப்புக்கு ஆபத்தான நிகழ்வுக்கும் அதற்கான எதிவுகூறல்களுக்கு அமைய அம்மணிக்கூடு ஆக்கப்பட்ட 1947 இலிருந்து இருபது தடவைகள் இம்மணிக்கூடு மாற்றஞ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இது நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் இருக்கத்தக்கதாக (பி.ப 11:53) சீர்செய்யப்பட்டது.

1947 இல் ரசியா மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் அதிகார போர் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் முந்தியதாக இக்கடிகாரம் செப்பஞ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அணு ஆயுதப் பாவனை மட்டும் கருதி இதன் செப்பமிடல் நிகழ்ந்த போதிலும், பின்னர் காலநிலை மாற்றம், இயற்கை வளம் மற்றும் நிலக்கரி பயன்பாடு என்பவையும் அடிப்படையாகக் கருதப்பட்டது.

(Source: விக்கிபீடியா தமிழ்)

No comments