Latest Updates

தண்ணீர் மற்றும் உணவு மூலம் பரவும் 2 கொடிய நோய்கள்..!


Image result for cholera

டைபாய்டு காய்ச்சல்
இந்நோய் டையாய்டு பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு தீவிரமான வியாதியாகும். இந்நோய்க் கிருமிகள் சிறு குடலில் பேயர்ஸ் பாட்சஸ் என்னும் நிண நீர் திசுக்களில் வளர்ந்து அவ்விடங்களில் புண் உண்டாக்குகிறது. இதன் நோய் நுண்ம காலம் ஒன்று முதல் மூன்று வாரங்களாகும்.

நோய் அறிகுறிகள்
 • அதிகப்படியான காய்ச்சல் ஒரு வாரத்திற்கு மேல் தொடரும்
 • நாக்கில் வெண்மை படிந்திருத்தல்
 • தலைவலி மற்றும் உடல்வலி
 • வழக்கத்தை விட குறைந்த நாடித் துடிப்பு (மற்ற காய்ச்சலின் போது நாடித்துடிப்பு சற்று அதிகமாகியிருப்பது வழக்கம்)
 • மலச்சிக்கல் அல்லது பேதி
 • வயிறு வீங்குதல் தொட்டால் வலி ஏற்படுதல்
 • வயிற்றுப் பகுதியில் தோலில் சிறு சிறு பொறிகள் ஏற்படுதல்.
Image result for typhoid fever

நோய் கண்டறிதல்
 • வைடால் பரிசோதனை
 • இரத்தத்தில் நுண்ணியிர் பரிசோதனை.
 • மலத்தில் டைபாய்டு பாக்டீரியாக்கள் உள்ளனவா என்று கண்டறிதல்.

சிகிச்சையும் செவிலிய பராமரிப்பும்
 • நோயாளி படுக்கையில் ஒய்வு எடுக்க வேண்டும்.
 • நோயாளிக்கு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் குளோராம் ஃபினிக்கால் குழாய் மாத்திரைகள் அளிக்க வேண்டும்.
 • மென்மையான நார்ச்சத்து அற்ற சத்துணவு அளிக்க வேண்டும்.
 • அதிக அளவு நீர் மற்றும் பானங்கள் கொடுக்க வேண்டும்
 • நோயாளியின் முக்கிய அடையாளங்களை (உடல் வெப்ப நிலை. நாடித்துடிப்பு சுவாச எண்ணிக்கை. இரத்த அழுத்தம்)
 • நோய்ச்சிக்கல்களான வயிற்றறையில் இரத்தபோக்கு அல்லது குடலில் ஒட்டை ஏற்படுதல் ஆகியவற்றிற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வர வேண்டும்
 • மலத்தில் நோய்க்கிருமிகள் அற்ற நிலை வந்தபின்தான் நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். அல்லது நோயாளிகள் டைபாய்டு கிருமிகளை பரப்புபவர்களாக இருப்பார்கள்.

தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிகள்
 • நோயை விரைவில் அறிந்து தகுந்த சிகிட்சைக்கு உட்படுத்துதல்
 • நோயாளியைத் தனிமைப்படுத்துதல்.
 • சிறுநீர். மலம் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் போக்கவேண்டும். மற்றும் நோயுற்றோரின் உடமைகளை தொற்று நீக்கம் செய்தல் வேண்டும்.
 • நோயுற்றோரை அணுகியோருக்கு டைபாய்டு தடுப்பூசி போட வேண்டும்
 • பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவு (குறிப்பாக பால் மற்றும் பாலிலிருந்து பெறும் உணவுப் பொருட்கள்) மற்றும் ஈக்களை கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியமாகும்.

காலரா
இது விப்ரியோ காலரா என்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் குறுகிய காலத்தில் ஏற்படும் தொற்று நோயாகும். இதன் நோய் நுண்ம பெருக்கும் காலம் சில மணி நேரங்கள் முதல் இரு நாட்களாகும். இந்நோய்க் கிருமிகள் சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் மூலம் உடலுக்குள் செல்கிறது. சிறு குடலைச் சென்றடைந்தவுடன் விரைவில் பன்மடங்காகப் பெருகி நோய் நச்சு பொருளை வெளியிடுகிறது. அதனால் குடல் சுவற்றிலிருந்து ஏராளமான நீரையும் உப்புகளையும் சுரக்கச் செய்து வெளியேற்றுகிறது.

Image result for cholera

அறிகுறிகள்
 • அதிகமான வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்படுதல். (மலம் அரிசி கஞ்சி போல் தோன்றும்).
 • கடுமையான நீர் இழப்பு.
 • நாடி துடிப்பு பலமிழந்தும் அதிகமாகவும் இருத்தல் இரத்த அழுத்தம் குறைவாகவும் இருக்கும்.
 • அதிக தாகம்.
 • கால் மற்றும் வயிற்று பகுதியின் தசைகள் இழுத்துப்பிடித்தல்
 • கண்கள் கண் குழிகளின் மிக உள்ளே இருத்தல்
 • சிறுநீர் மிகவும் குறைவாக கழிதல்
 • நோய் தீவிரமான நிலையில் நோயாளியில் உடல் நிலை மிகவும் மோசமாகலாம்.

தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்
 • நோயாளியை மற்றவர்களிடமிருந்து உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்.
 • நோயாளிகளுக்கு சிரைகள் மூலம் போதிய திரவங்கள் கொடுத்து அவருடைய உடலில் நீரை சமன்படுத்த வேண்டும்.
 • மருத்துவரின் பரிந்துரைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை அளிக்கலாம் உடலின் முக்கிய குறியீடுகளை நாடித்துடிப்பு சுவாசம். வெப்ப நிலை மற்றும் இரத்த அழுத்தம்) மணிக்கொரு முறை கண்காணிக்கவும்.
 • நோயாளியின் சிறுநீர் வெளியேறுதல் அளவை கண்காணித்து வர வேண்டும் (ஒரு மணி நேரத்தில் சாதாரணமாக 30 - 60)
 • நோயாளியை அரிசிக் கஞ்சி. மோர் மற்றும் மிகுதியான திரவ உணவுகள் கொடுத்து நீர் இழுப்பை சரி செய்ய வேண்டும்
 • தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்படுமானால் தாய்பாலை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
 • காலரா நோயினால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக கண்டுபிடித்தல். வயிற்று போக்கினால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிக்கும் காலரா நோய்க்கான பரிசோதனை செய்யப் படவேண்டும்
 • சந்தேகத்திற்குரிய (காலரா, வயிற்று போக்கு நோயாளிகளை உடனடியாக சுகாதார மேலதிரிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லுதல்
 • நோயாளியைத் தனிமைப்படுத்துதல். அவரது மலம் மற்றும்
 • வாந்திகளை தொற்று நீக்கம் செய்தல்.
 • காலரா நோயினால் இறந்த நோயாளிகளின் உடலை 2% லைசால் தொற்று நீக்கி மருந்தால் நனைக்கப்பட்ட துணியால் போர்த்தி எரியூட்ட வேண்டும்.
Related image

துப்புரவு முறைகள்.
 • அனைத்து நீர் நிலைகளிலும் குளோரின் கலத்தல்
 • 9 கொதிக்க வைத்து ஆறிய நீரை குடிக்க வலியுறுத்துதல்
 • 9 சுகாதார உணவு பழக்கவழக்கங்கள் உணவு பொருட்கள்
 • ஈக்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சாப்பிடு முன்கைகளை சோப்பினால் சுத்தமாக கழுவ வேண்டும்
 • காலரா தொற்று அதிகமாகயிருக்கும் காலங்களில் அனைவருக்கும் காலரா தடுப்பூசி போட வேண்டும்.
 • காலரா நோய் தடுக்கும் முறைகள் பற்றி சமுதாயத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
No comments