ஜூலை 28/29/30 : அணைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் நிகழ்ச்சித்திட்டம்..!


எதிர்வரும் ஜூலை 28 (வெள்ளி), 29 (சனி), மற்றும் 30 (ஞாயிறு) தினங்களில் இலங்கையிலுள்ள அணைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு அமைய எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளில் பாடங்கள் நடாத்த வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக அன்றைய தினம், மாணவர்கள், ஆசிரியர்கள்,  பழைய மானவர்கள், பெற்றோர் ஆகிய அனைவரும் இணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே வெள்ளிக்கிழமை மாணவர்கள் பாடசாலை வரும்போது பாடசாலை சீருடை அல்லது சிரமதனப் பணிக்கு ஏற்புடைய ஒழுக்கமான வேறு ஒரு ஆடையை அணிந்துவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 29 (சனி) மற்றும் 30 (ஞாயிறு) தினங்களில் தொடர்ச்சியாக இப்பணி முன்னெடுக்கப்படவேண்டும் என்பதோடு அன்றய தினம் பாடசாலை அதிபர்கள் மூலம் சுகாதார அதிகாரிகள் மற்றும் இன்னும் சம்பந்தப்பட்ட அதிகாரிககளை ஒருங்கிணைத்து டெங்கு நுளம்பு ஒழுப்பதற்கான புகையடித்தல் மற்றும் ஏனைய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: dgi.gov.lk

Previous Post Next Post