• Latest Updates

    Sunday, July 23, 2017

    அரச முகாமைத்துவ உதவியாளர்கள் 3000+ பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்..!

    Image result for ministry of public administration sri lanka

    இவ்வருடம் அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக 3000 இற்கும் மேற்பட்டோர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சை மேற்கோள் காட்டி அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

    அதற்கமைய இதற்கான போட்டிப்பரீட்சைகள் இன்று மற்றும் நேற்று நடந்துமுடிந்தன. இம்முறை அரச முகாமைத்துவ உதவியாளருக்கான போட்டிப்பரீட்சையில் தோற்ற ஒரு இலட்சம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். 

    கடந்த மே மாதம் நடத்தப்படவிருந்த குறித்த பரீட்சை மோசமான காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது.

    பரீட்சை நடத்தப்பட்டு இரு மாதங்களுக்குள் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு முகாமைத்துவ சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews