இணையத்தில் சற்று கவனமாக இருங்கள் : 6 மாதத்தில் 1600 இணைய மோசடி முறைப்பாடுகள்..!

Related image

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஆறு மாத காலத்தினுள் இணைய மோசடி சம்பந்தமாக 1600 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இணைய பாதுகாப்பிற்கான தேசிய நிலையம் (National Center for Cyber Security - www.cert.gov.lk) தெரிவித்துள்ளது.

Related image

இம்முறைப்பாடுகளில் 80 வீதமானவை போலி பேஸ்ஸ்புக் கணக்குகள் சம்பந்தமானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இணையதளங்களில் பொருட்களை விற்பதாகக் கூறி சில போலியான வழிகளில் நிதி மோசடி செய்துள்ளதாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இணையதளங்களில் பொருட்களை வாங்குவோர், தாங்கள் கொடுக்கல், வாங்கல் செய்வது போலியான விற்பனை முகவர்களுடன் அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Related image

சிலவரங்களுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் பரவி வந்த வைரஸ்ஸினால் இலங்கைக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்படுவதோடு இது பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான ஈமெயில்களை திறக்க வேண்டாம் எனவும் உங்கள் கணனிகளை முடியுமானவரை backup செய்து வைத்துக்கொள்வதோடு வைரஸ் கார்ட் (Virus Guard) மென்பொருளை அப்டேட் செய்து வைத்துத்துக்கொள்வதால் மேற்கூறியது போன்ற வைரஸ் தாக்குதல்களில் இருந்து கணனிகளை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல்: dgi.gov.lk

Previous Post Next Post