Latest Updates

ATM இயந்திரம் அறிமுகமாகி 50 ஆண்டுகள்..!

Related image

ATM இயந்திரம் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவையொட்டி லண்டனில் உள்ள உலகின் முதல் ATM இயந்திரம் தங்கத்தால் முலாமிடப்பட்டுள்ளது.

ATM எனப்படும் தானியங்கி பணம் தரும் இயந்திரம் முதன்முதலில் லண்டன் என்ஃபீல்டில் உள்ள பார்க்ளேஸ் வங்கியில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி அமைக்கப்பட்டது. பின்னர் இந்த இயந்திரம் உலகம் முழுவதும் பரவி மக்களின் அன்றாட பண தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அறிமுகமாகியுள்ள போதிலும், ATM இயந்திரங்களுக்கு உள்ள பெறுமானம் இன்றளவும் மக்களிடம் குறையதுள்ளதாக கூறப்படுகின்றது.  தற்போது உலகம் முழுவதும் 30 லட்சம் ATM இயந்திரங்கள் செயல்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.