Latest Updates

நிலவில் உருளைக்கிழங்கு பயிரிட முடியுமா? - சீனா முயல்கிறது




எதிர்வரும் நிலாப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திரனில்உருளைக்கிழங்குகளை வளர்க்க சீன அறிவியலாளர்கள் முயற்சி செய்ய உள்ளனர்.

சாங்கிங் பல்கலைகழகத்தின் பேராசிரியரான ஜி ஜெங்ஜின்," அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள சாங்ஜி-4 திட்டத்தின் ஒரு பகுதியாக, இங்கு நிலவுவது போன்ற சுற்றுச்சூழல் கொண்ட ஒரு சிறிய பெட்டகத்திற்குள் உருளைக்கிழங்குகள் அடைக்கப்படும்.
பூமியின் ஒரே இயற்கை செயற்கைக்கோளின் (நிலவு) மேற்பரப்பில் உள்ள சிறிய சிலிண்டருக்குள் சில பட்டுப்பூச்சி லார்வாக்களும் அடைக்கப்படும்."என சாங்கிங் மார்னிங் போஸ்ட் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சந்திரனின் மேற்பரப்பில் பூச்சிகள் அல்லது கிழங்குகள் தாக்குப்பிடிக்குமா என்பதை கண்டறிவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இந்த ஆராய்ச்சியில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு எதிர்காலத்தில் சந்திரனில் மனித வசிப்பிடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம்." என சீன சர்வதேச வானொலி தெரிவித்துள்ளது.

ஆன்டி வெயிர் என்பவர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டு வெளியான 'மார்ஷியன்' என்ற விஞ்ஞான கதையம்சம் கொண்ட திரைப்படத்தில், உருளைக்கிழங்குகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. செவ்வாய் கோளில் சிக்கிக் கொள்ளும் விண்வெளி வீரரான மேட் டேமன், அந்த கோளில் வாழ்வதற்காக உருளைக்கிழங்குகளை பயிரிடுவது போன்ற காட்சிகள் மார்ஷியன் படத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: BBC Tamil

No comments