பாடசாலை தளபாடங்களுக்கு பலகை/இரும்புக்கு பதிலாக பொலிமர்..!

Related image

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளை நவீனமயப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் பல புதிய திட்டங்களை வகுத்துவருகிறது.

இதற்கமைவாக பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கற்றல் நடவடிக்கைகளை மாணர்வகள் மேற்கொள்வதால், இதை மேலும் இலகுவாக்கும் பொருட்டு, சகல அரசாங்க பாடசாலைகளிலும் வகுப்பறை தளபாடங்களுக்காக தற்போது பாவிக்கப்படும் பலகை/இரும்புக்கு பதிலாக PVC கலக்கப்படாத பொலிமர் (Polymer) மூலப்பொருட்களாலான தளபாடங்களை பெற்றுக்கொடுப்பதற்காக வேண்டி கல்வி அமைச்சரினால் முவைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இவ்வருடம் (2017) தொடங்கி எதிர்வரும் 4 வருடங்களுக்குள் சகல அரச பாடசாலைகளிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: dgi.gov.lk / அமைச்சரவை தீர்மானங்கள் (11.07.2017


Previous Post Next Post