பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்..!

Related image

பின்தங்கிய மற்றும் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இலவச காலணிகளை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 

இதற்கான தற்போதைய செயற்திட்டத்திற்கு நீண்ட காலம் எடுத்துள்ளதுடன், வழங்கப்படும் பாதணிகள் சில மாணவர்களின் கால்களுக்கு பொருந்தமையினாலும் இதில் சில சிக்கல்கள் தோன்றியுள்ளன. 

ஆகவே இப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலும், மாணவர்களுக்கு தரம் வாய்ந்த காலணிகளை வழங்கும் நோக்கிலும் 2017 வருடத்திக்கான மாணவர்களுக்கு காலணிகளை வழங்கும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு காலணிகளை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி பண வவுச்சர் ஒன்றை வழகுவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Previous Post Next Post