மாவட்ட ரீதியாக பட்டதாரிகளுக்கு அரச நியமனம்..!

Image result for ranil wickramasinghe

மாவட்ட மட்டத்தில் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் 12.07.2017 திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் 11.07.2017 அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊ கவியலாளர் சந்திப்பிலேயே இது சம்பந்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப இப்பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டப் பணிகளின் நோக்கத்தை நிறைவேற்றல், தகவல் சேகரித்தல், அறிக்கை தயாரித்தல் போன்ற சேவைகளுக்கு இப்பட்டதாரிகள் பயன்படுத்தப்படவுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஒரு வருட பயிற்சி கால அடிப்படையிலேயே இப்பட்டதாரிகளை முகாமைத்துவ சேவை திணைக்களத்தில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதுடன் அவர்களை இதுவரை அடையாளங்காணப்பட்ட வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சரான பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்கள் மேற்படி கோரிக்கையை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதுடன், மேற்படி கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post