Latest Updates

முன்னறிவித்தலற்ற திடீர் மின்விநியோகத் தடை..!

Image result for powercut

முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் மின்விநியோகத் தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தி செயற்பாடுகள் குறைந்துள்ளதும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் ஸ்தப்பித்துள்ளதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்பாரதவிதமாக மின்சார தடை ஏற்படும் என மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தற்போது நிலவும் கேள்விக்கு ஏற்ற அளவு மின்சாரத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே இன்னும் சில தினங்களில் பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்கள் பகல் நேரங்களை மிகவும் திறனுள்ள விதத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துதல் நன்று.

Source: Daily Ceylon