• Latest Updates

    Sunday, August 20, 2017

    நேற்றைய உயர்தர இரசாயனவியல் பரீட்சையின் 3 வினாக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டவை..!


    நேற்றைய உயர்தர இரசாயனவியல் பரீட்சையின் 3 வினாக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டவை..!

    க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் நேற்று (19) நடைபெற்ற இரசாயனவியல் பகுதி 2 இற்கான வினாப்பத்திரத்தில் வந்திருந்த 3 வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் ஏற்கனவே வெளியிடப்பட்டவை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

    பரீட்சை நடந்து முடிந்த பின்னர் பிரத்தியேக வகுப்பு நடாத்தும் தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட  துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மாதிரி வினாப்பத்திரத்தில் காணப்பட்ட அதே வகையான 3 வினாக்கள் நேற்றைய உயர் தரப் பரீட்சை வினாப்பத்திரத்திலும் காணப்பட்டதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    குறித்த துண்டுப் பிரசுரத்தில் அடுத்த வருடம் கம்பஹாவில் உயர் தரத்திற்கான புதிய வகுப்புக்கள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அம்மாணவர்கள் கூறியுள்ளனர்.

    இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில், பிரத்தியேக வகுப்புக்களிடையே காணப்படும் போட்டித் தன்மையின் ஒரு வெளிப்பாடே இந்த சம்பவம் எனக் கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்களினால், மாணவர்களின் மனோ நிலை பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சகோதர ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

    VIDEO:


    ஆதாரம் : Daily Ceylon / Hiru News

    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews