• Latest Updates

    Tuesday, August 1, 2017

    இலங்கையில் மூன்றில் இரண்டு பகுதி வறட்சியால் பாதிப்பு..!

    Related image

    இலங்கையில் சுமார் 17 மாவட்டங்கள் வறட்சியால் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

    நாடு பூராகவும் மூன்று இலட்சம் குடும்பங்களை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வறட்சியால் வட மாகாணம் கூடுதலான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 462,815 மக்கள் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். வட மாகாணத்தை தொடர்ந்து கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    நிகழும் வறட்சியான காலநிலை காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் வற்றி இருப்பதன் காரணமாக அங்குள்ள மக்கள் குடிநீர் வசதியை பெற்றுக்கொள்வது பாரிய சவாலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    Source: Daily Ceylon
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews