Latest Updates

புற்றுநோய் வராமல் தடுக்க சில உணவுகள்..!

Related image

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கவழக்கம், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றை சரியாக பின்பற்றி வந்தால் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் நல்ல ஆரோக்கியமான உணவுகள் இதோ,

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் எனும் ரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களை வராமல் தடுக்க உதவுகிறது.
Related image
  
பூண்டு

பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. பூண்டில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது.
 Image result for பூண்டு

கேரட்

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் போன்ற புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

 Image result for கேரட்

காளான்

காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடி புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கிறது.

Related image

நட்ஸ் (Nuts)

நட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்க உதவுகிறது. அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

Related image


பப்பாளி

பப்பாளியில் விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதை அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கலாம்.

Image result for பப்பாளி


ஆனைக்கொய்யா

ஆனைக்கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது நம் உடலில் உள்ள புற்றுநோயை ஏற்படுத்தும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றுகிறது.

Image result for avocado

திராட்சை

திராட்சை பழத்தின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், நோயெதிர்ப்பு அழற்சி, உள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் அதிகம் உள்ளது. எனவே திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கலாம்.

Image result for grapes

தக்காளி

தக்காளியில் உள்ள லைகோபைன், விட்டமின் C, ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுப்பதுடன், வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.

Related image