Monday, August 21, 2017

வினாத்தாளை வெளியிட்ட ஆசிரியரின் தந்தை / சகோதரர் கைது..!

arrested1

உயர்தர இரசாயனவியல் வினாத்தாளை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தின் பரீட்சை நிலையம் ஒன்றின் அருகில் இரசாயனவியல் வினாத்தாளிலுள்ள வினாக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த ஆசிரியருடன் தொடர்புடையய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான ஆசிரியரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் கந்தானை பிரதேசத்திலுள்ள தமது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பிரதான சந்தேக நபரான ஆசிரியர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: Daily Ceylon
SHARE

0 coment�rios: