ஆசிரியர்களின் உள ஆரோக்கியத்துக்கான அனைத்து வசதிகளையும் வழங்க தயார்..!

Related image

ஆசிரியர்கள் ஆரோக்கியமான மனநிலையுடன் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கு அரசாங்கத்தினாலான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுர வலிசிங்க ஹரிஸ்சந்திர கல்லூரியின் புதிய கட்டிடத் தொகுதியை மாணவர் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் நேற்று (04.08.2017) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு ஆசிரியர்களும் அதிபர்களும் மேற்கொள்ளும் முயற்சியானது சம்பளத்தினால் அளவிட முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Source: அரசாங்க தகவல் திணைக்களம்.

Previous Post Next Post