Latest Updates

பரீட்சை முறைகேடுகளை கட்டுப்படுத்த விசேட நிபுணர் குழு..!


நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரீட்சை முறைகேடுகளை மட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவொன்றை அமைக்க கல்வி அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J புஷ்பகுமாரவுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, தகவல் தொழிநுட்பம், நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மற்றும் பரீட்சை சட்டதிட்டங்கள் தொடர்பான அறிவு கொண்ட நிபுணர் குழுவொன்றை அமைத்து அறிக்கையொன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த அறிக்கை மூலம் பெறப்படும் பரிந்துரைகளை செயற்படுத்துவதன் ஊடாக பரீட்சை முறைகேடுகளை கட்டுப்படுத்த பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: Daily Ceylon