Tuesday, August 15, 2017

உயர்தர பரீட்சை வினாத்தாள் கொண்டு சென்ற வாகனம் விபத்து..!

Related image

உயர்தர பரீட்சை வினாத்தாள் கொண்டு சென்ற வாகனம் விபத்து..!

உயர்தர பரீட்சை வினாத்தாள்களை கொண்டு சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயர்கல்வி அமைச்சிலிருந்து பதுளை உயர் தொழில்நுட்ப நிலையத்திற்கு வினாத்தாள்களை கொண்டு சென்ற உயர் கல்வி அமைச்சுக்கு சொந்தமான வேன் ஒன்றே குறித்த விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை – பண்டாரவெல பாதையின் உடுவர பிரதேசத்தில் இன்று அதிகாலை மதில் ஒன்றின் மீது வேண் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் குறித்த வினாப்பத்திரங்கள் பாதுகாப்பான முறையில் பதுளை தொழில்நுட்ப நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலி-எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: Daily Ceylon


SHARE

0 coment�rios: