ஞாயிறு மற்றும் போயா தினங்களில் டியூசன் வகுப்புக்களுக்குத் தடை..?

 
 ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பிற்பகல் 2 மணி வரை தனியார் வகுப்புக்களை தடைசெய்யும் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத போதனைகளைக் கற்பதன் மூலமே சிறந்த பிள்ளைகளை உருவாக்க முடியும் எனவும், மேற்கூறிய சட்டமூலத்தின் மூலம் அணைத்து மாணவர்களுக்கும் அன்றைய தினம் மார்க்கக் கல்வியை கற்கும் வாய்ப்பு கிடைக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: dgi.gov.lk

Previous Post Next Post