• Latest Updates

    Monday, August 28, 2017

    யாழில் படகு கவிழ்ந்து ஐந்து மாணவர்கள் பலி..!

    Related image

    யாழ்ப்பாணம் மண்டத்தீவு கடலில் படகொன்று கவிழ்ந்ததன் காரணமாக பாடசாலை மாணவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இம்முறை உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்திருந்த யாழ்பாணம்,நல்லூர்,கொக்குவில்,உரும்பிராய் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்துள்ள 5 மாணவர்களின் சடலங்களும் யாழ்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை காணாமல் போயிருக்கும் மற்றைய மாணவனை தேடும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும்,தெரிவிக்கப்படுகிறது.


    Source : Daily Ceylon

     
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews