13 வருட கட்டாயக்கல்வி ஒக்டோபர் தொடக்கம் நடைமுறையில்..!கல்வியமைச்சின் 13 வருட கட்டாயக்கல்வி திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தெரிவு செய்யப்படட 42 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு நன்மைகளுடன் ஆரம்பிக்கப்படும் முதலாம் கட்டம் வெற்றியடையும் பட்சத்தில் எதிர்வரும் 2019ம் ஆண்டில் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2030ம் ஆண்டுக்கான நிலையான அபிவிருத்திக்கு எதிர்கால சந்ததியினரை தயார்படுத்தும் நோக்கில் பாடசாலைக் கல்வியினூடாக மாணவர்களை நிபுணத்துவமும் திறமையும் மாற்றியமைக்கும் நோக்கில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மாணவர்களும் சமூகத்திற்கும் சிறந்த நன்மைகள் இந்நன்மையினூடாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Source : அரசாங்க தகவல் திணைக்களம்.
Previous Post Next Post