Latest Updates

பாடசாலை சுற்றுலா சென்ற பஸ் லொறியுடன் மோதி விபத்து – 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!

Bus-Accident

புத்தளம் சிலாபம் வீதியின் முந்தல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றின் மீது பஸ் வண்டி ஒன்று மோதியதன் காரணமாக 18 பேர் காயமடைந்தநிலையில் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விபத்தில் நொச்சியாகம ராஜங்கனய பகுதியை சேர்ந்த பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் கல்விச்சுற்றுலா ஒன்றிற்காக பயணிக்கும் வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.





Source : Daily Ceylon / Madawala News