Latest Updates

இலங்கை பாராளுமன்றத்திற்கு 70 ஆண்டுகள் : ஒக்டோபர் 03 விசேட அமர்வு..!

Related image

இலங்கை: பாராளுமன்றத்தில் விசேட அமர்வு ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி பிற்பகல் 3.30 க்கும் 4.30 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்திற்கு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த விசேட அமர்வு இடம்பெறஇருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் நேற்று இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது .

இதற்கமைவாக இம்மாதம் 26ஆம் திகதியும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியும் பிற்பகல் 1.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரையில் ஏனைய அமர்வுகள் இடம்பெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



Source : Daily Ceylon