கலை, விளையாட்டு, புத்தாக்கம் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு..!

Related image

விசேட திறமைகள் உள்ள மாணவர்களுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 22ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சரின் எண்ணக்கருவிற்கமைய, விளையாட்டு, கலை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளில் விசேட திறமைகள் கொண்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆரம்பமானது. கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி 2017ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இப்புலமைப்பரிசில் திட்டத்தினூடாக மேற்கூறப்பட்ட துறைகளில் விசேட திறமை மிக்க ஆயிரம் மாணவர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா வீதம் ஒரு தடவைக்கு 50,000.00 ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இ
இதன் ஆரம்பக்கட்டமாக 12ம் தர உயர்தர மாணவர்களுக்கு சுஹத புலமைபரிசில் வழங்க எதிர்பார்த்துள்ளதுடன் விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களை www.moe.gov.lk என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

Source: அரசாங்க தகவல் திணைக்களம்

Application Form | புலமைப் பரிசில் திட்டம் - கல்வி அமைச்சு..!

Previous Post Next Post