Latest Updates

'கலன மித்துரு – பொத் சுமித்துரு' ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்..!



https://tamil.news.lk/media/k2/items/cache/38db0aac47df717351251d73d5c98d46_XL.jpg

'கலன மித்துரு – பொத் சுமித்துரு' (புத்தகமே சிறந்த நண்பன்) பாடசாலை மாணவர்களின் வாசிப்பு இரசனையை அதிகரிக்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளுடன் இணைந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் அபிவிருத்தி மற்றும் விசேட கருத்திட்ட பிரிவினால் இந்த செயற்திட்டம் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று அமுல்படுத்தப்படுகிறது.

இந்த செயற்திட்டத்தின் மூலம் நிறைவான ஆளுமையுடன் கூடிய மாணவர்களை உருவாக்குவதற்கான அறிவை வழங்குவதுடன் அவர்களை இலக்கிய இரசனையின்பால் ஈர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

 நாடு முழுவதுமுள்ள உயர்தர வகுப்புகளைக் கொண்டுள்ள 2820 பாடசாலைகளில் செயற்திட்டத்தின் முதற்கட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அப் பாடசாலைகளுக்கு சிங்களம், தமிழ், ஆங்கில மொழியிலான தலா இரண்டு புத்தக பொதிகள் வழங்கப்படவுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் போட்டிகளை நடத்தி புத்தகம் வாசித்தல் தொடர்பில் பிள்ளைகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் செயற்திட்டமும் இதனோடு இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Source : News.lk