சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க வீதி நாடகங்கள்..!

Related image

வீதி நாடகங்களினூடாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மக்களை தௌிவுபடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்காலத்தில் மக்களை தௌிவுபடுத்தும் சிறந்த ஊடகமாக கருதப்படும் வீதி நாடகத்தினூடாக மேற்கொள்ளப்படும் தௌிவுபடுத்துவதனூடாக மிக இலகுவாக அனைவரையும் தகவல்கள் சென்றடையும் என தாம் கருதுவதாக அதிகாரசபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

மேலும், அநேகமான நாடுகளில் மக்களை  தௌிவுபடுத்துவதற்கு இவ்வூடகம் பயன்படுத்தப்படுவதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி சில்வா எழுதிய பிந்து, ராணிக்கு ஒரு நண்பன் ஆகிய புத்தகங்களை அடிப்படையாக கொண்டு இவ்வீதி நாடகங்கள் நடத்தப்படவுள்ளன.

தற்போது, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, அநுராதபுரம், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பிந்து மற்றும் ராணிக்கு ஒரு நண்பன் ஆகிய  ஆகிய தலைப்புகளில் வீதி நாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நாடு முழுவதும் இந்நாடகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Source : அரசாங்க தகவல் திணைக்களம்.

Previous Post Next Post