Latest Updates

உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனை முதற்தடைவையாக இலங்கையில்..!



உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனையாகக் கருதப்படும் 'பிக் பாட் வுல்வ்' புத்தக விற்பனை (Big Bad Wolf book sale) முற்தடைவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது.

கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை இடம்பெறும்.

உலகம் முழுவதும் வாசிக்கப்படும் சுமார் 2 ஆயிரம் பிரபல ஆங்கில புத்தகங்கள் உள்ளிட்ட 15 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இங்கு விற்பனை செய்யப்படும்.

இந்த புத்தக விற்பனை 24 மணி நேரமும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

Source : News.lk