Latest Updates

யாழ். மாணவி வித்தியா படுகொலை - இன்று நீதி நிலைநாட்டப்பட்டது..!



இலங்கை: யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு - 7 பேருக்கு மரண தண்டனை..!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளுக்கும் யாழ். மேல்நீதிமன்றம் மரண தண்டனை வித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்றின் விளக்குகள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் தீர்ப்பாயம் தூக்குத் தண்டனையை அறிவித்தது.

1ஆம் 7ஆம் எதிரிகள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தரப்புக்கு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலா 30 ஆண்டு ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் இன்று காலை கூடியது இதன்போது, வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்தார்.

Source : News.lk