இலங்கையர்கள் ஹிந்தி மொழி கற்பது பயனுடையது : இந்தியத் தூதுவர்..!

Related image

இலங்கையர்கள் ஹிந்தி மொழியை கற்பது சுற்றுலாத்துறைக்கு பயனுடையதாக அமையும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

ஹிந்தி தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய கலாசார நிலையம், இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் களனி பல்கலைக்கழகத்தின் ஹந்தி மொழிப்பிரிவும் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹிந்தி கற்கையை ஊக்குவிக்க களனி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டியுள்ளார்.

இலங்கையில் ஹிந்தி மொழி கற்கையில் காட்டப்படும் ஆர்வம் குறித்தும் அவர் பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post