மூன்றாம் தவணைக்காக இன்று ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் விஷேட வேண்டுகோள்..!

 Image result for ministry of education sri lanka

இந்த வருடத்தின் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின்றன.

இந்த நிலையில் பாடசாலையின் கல்வி செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு, சகல அதிபர்களுக்கும் சுற்று நிரூபம் அனுப்பியுள்ளது.

அதன்படி, பாடசாலையில் சுற்றாடலை சுத்தம் செய்யும் பணிகள் 3 தினங்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Hiru News
Previous Post Next Post