Latest Updates

சர்வதேச சிறுவர்தின நிகழ்வு நாளை அனுராதபுரத்தில்..!

Related image

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்ட தேசிய வைபவம் அனுராதபுரத்தை கேந்திரமாகக் கொண்டு இடம்பெறவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பெற்றோர், முதியோரைப் பாதுகாப்போம் - உன்னதமான உலகத்தை நோக்கி பிள்ளைகளை அழைத்துச் செல்வோம்' என்ற தொனிப்பொருளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த வைபவம் நாளை (1) இடம்பெறவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்துள்ள 'ரிக்மசரிய' என்ற சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நாளை காலை கொழும்பு பண்டரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.


இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிவில் விமான சேவை அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. சிவில் விமான சேவைத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்திற்கான விசேட சித்திரப் போட்டியொன்றும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source : News.lk