Latest Updates

இலங்கையின் முதலாவது Smart Classroom பாடசாலை..!


Image result for smart classroom in sri lanka

ஸ்ரீ ஜயவர்த்தனபுர மகாவித்தியாலயத்தில் முதலாவது திறன் விருத்தி வகுப்பறை

ஸ்மாட் கிளாஸ் என்று அழைக்கப்படும் இலங்கையின் முதலாவது திறன் விருத்தி வகுப்பறை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மகாவித்தியாலயத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த திறன் வகுப்பறையை பார்வையிட்டார்.

21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வியை அரசாங்கம் அமுல்படுத்துகின்றது. இந்த வகுப்பறை பரீட்சார்த்த முயற்சியாகும்.
இதன் மற்றுமொரு கட்டமாக அடுத்த வருடம் முதல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ரெப் (வுயடி) கணனிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் ஸ்மாட் வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது.


பாடசாலை மாணவர்களுக்கு தரம் 13 வரையிலான கல்வி கட்டாயமாக்கப்படும். இரண்டாம் நிலைக் கல்வியை பாடசாலை மட்டத்தில் தொழில் கல்வியாக வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும் ஸ்மாட்கிளாஸ் வகுப்புக்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source : News.lk