Latest Updates

லிட்டில் ஹாட் – 10 மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு..!

Image result for little heart sri lanka

லிட்டில் ஹாட் வேலைத் திட்டம் மற்றும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அமைக்கத் திட்டமிடப்பட்ட இருதய சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன்படி, இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

10 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தை நிர்மாணிக்க இரண்டு பில்லியன் ரூபா தேவை என மதிப்பிடப்பட்டது.

எனவே, குறித்த நிதியை சேகரிக்க இலங்கை சிறுவர் வைத்திய நிபுணர்கள் சங்கம், ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலை மற்றும் மனுஷத் தெரண ஆகியன இணைந்து லிட்டில் ஹாட் என்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்தன.

இதற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக நடைபெறும் என்றார்.

நீங்களும் உதவலாம் :  https://www.littlehearts.lk/donation/

Source : Daily Ceylon