தேசிய இளைஞர் மென்பொருள் போட்டி 2017-2019

Related image

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன்  இணைந்து செயற்படுத்துகின்ற தேசிய இளைஞர் மென்பொருள் போட்டியின் கீழ், அபிவிருத்தி சவால்களுக்கு தீர்வாக பயன்படுத்துவதற்கு உகந்த மென்பொருற்களை நிர்மாணிப்பதற்காக மாகாண மட்டத்தில் 03 போட்டிகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வெற்றியாளர்களுக்கு அது தொடர்பிலான வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கான அனுசரனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ள இளைஞர் மென்பொருள் போட்டித்தொடரினை 2017 – 2019 காலப்பிரிவில் நடாத்துவது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்  ஹரின் பர்னாந்துவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் முடிவுகள் (2017.10.10)
Previous Post Next Post