சமூக பணிகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்ப மாநாடு - 2018.

Related image

2016ம் ஆண்டு நடாத்தப்பட்ட முதலாவது சமூக பணிகளுக்காக விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டின் மூலம் வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கை விஞ்ஞானிகளின் உதவிகளை இந்நாட்டு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான ஆரம்ப முயற்சியினை எடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

குறித்த மாநாட்டின் வெற்றியினை கவனத்திற் கொண்டு வெளிநாடுகளில் இருக்கின்ற இலங்கை விஞ்ஞானிகள், ஏனைய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி துறையில் பிரபல்யம் பெற்ற நபர்கள் மற்றும் 1000 பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களையும் இணைத்துக் கொண்டு இரண்டாவது சமூக பணிகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டினை நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

 அதனடிப்படையில் பல்வேறு தொனிப்பொருள்களின் கீழ் 'சமூக பணிகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்ப (STS) மாநாட்டினை' இரண்டாவது முறையாகவும் 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கொழும்பில் நடாத்துவது தொடர்பில் விஞ்ஞானம், தொipல்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-அமைச்சரவை முடிவுகள் (2017.09.26)

Previous Post Next Post