• Latest Updates

    Tuesday, October 17, 2017

    ஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்கு..!



    அமெரிக்காவில்  இம்முறை நடைபெற்ற ஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதே உறுப்பு நாடுகளின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டுமென்பதை அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

    இம்முறை ஜி-24 மாநாட்டின் தொனிப் பொருள், 'அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றம் என்பதாகும்.'

    ஜி-24 மாநாட்டு அமைப்பின் கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டு முக்கியத்துவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

    தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக வினைத்திறனை அதிகரித்தல், அபிவிருத்திக்கான நிதியை வழங்குதல் என்பன கருத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்களாகும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் , சர்வதேச வர்த்தகம், புதிய உற்பத்திகள், தனியார் துறையின் முதலீடுகளை விருத்தி செய்தல் என்பன தொடர்பில்  கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்,

    Source : News.lk
    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews