தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளுக்கு முன் பெற்றோருக்கான அறிவுறுத்தல்.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு முன் பெற்றோருக்கான அறிவுறுத்தல்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் அல்லது வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் பாராட்டப்படும் அதே நேரத்தில், நல்ல பெறுபேறுகளை எடுக்கத் தவறிய உங்கள் பிள்ளைகளை கண்டிப்பதில் இருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். மிகவும் அவதானமாக அவர்களிடம் நடந்துகொள்ளுங்கள்.

இத்துடன் உங்கள் பிள்ளையினால் கல்வி கற்கத் இயலாது அல்லது அவர்களால் முடியாது என்று நீங்களே முடிவெடுத்து அவர்களை கைவிட்டு விடாதீர்கள். புலமைப்பரிசில் பரீட்சை என்பது அவர்களில் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒன்று என ஒருபோதும் எண்ணிவிடாதீர்கள். அதனை தாண்டி அவர்கள் எத்தனையோ பரீட்சைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது, வாழ்வில் இன்னும் எத்தனையோ படிக்கற்களை அவர்கள் ஏறிச்செல்ல வேண்டும். அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் அளவிற்கு உங்கள் கண்டிப்பான நடத்தை அமைத்துவிடக்கூடாது.

தன்னால் சித்தியடைய முடியவில்லை அல்லது நல்ல பெறுபேறுகளைப் பெற முடியவில்லை என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருக்க, நீங்கள் அவர்களைக் கண்டிக்கும் விதம் அவர்களின் பிஞ்சு மனதை வெகுவாகப் பாதிப்பதுடன், அவர்களின் எதிர்காலத்தையும்  பாதித்துவிடும். கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, அவர்களில் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்த உங்களால் முடிந்த திட்டங்களை இன்றே வகுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் இன்று அவர்களுக்குக் கொடுக்கும் தன்னம்பிக்கை நிச்சயமாக அவர்களின் எதிர்காலத்திற்கு பெரிதும் துணைநிற்கும் என்பதை மட்டும் நினைவில்கொள்ளுங்கள்.

நன்றி,
மாணவர் உலகம்.
Previous Post Next Post