Latest Updates

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : தேசிய ரீதியில் முன்னிலை வகிப்போர்..!


பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுகளின் படி தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய ரீதியில் முதலாம் இடம் நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலயத்தின் மாணவன் தினுக கிரிஷான் குமாரவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இவர் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடம் இரு மாணவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கம்பஹா மாவட்ட கணேமுல்லை வெளிபிள்ளேவ கனிஷ்ட வித்தியாலய எம்.ஏ.எம். இந்துமினி ஜயரத்னவும், கேகாலை மாவட்ட துல்ஹிரிய   கனிஷ்ட வித்தியாலய ரி.எம். சஞ்ஜய நயனஜீத் தென்னகோன் ஆகியோர் இவ்வாறு முதலிரண்டு இடங்களுக்கு தெரிவாகியுள்ளனர். இவர்கள் பெற்றுள்ள புள்ளிகள் 197.

மூன்றாம் இடத்தை கம்பஹா மாவட்ட கடவத்தை கிரில்லவெல கனிஷ்ட வித்தியாலய டீ.ஏ. தருள் பெற்றுக் கொண்டுள்ளார். இவர் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தேசிய ரீதியில் நான்காம் இடத்துக்கு 12 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

Source : Daily Ceylon