Latest Updates

இயற்கை முறையில் நுளம்பை விரட்ட 8 வழிகள்..!

Image result for mosquito

நுளம்பை விரட்ட ரசாயன பூச்சி கொல்லி புகையில் உட்கார்ந்து இருப்பதை தவிர்த்து இயற்கை முறையில் நுளம்பை விரட்டுவது உடலுக்கு ஆரோக்கியமானது ஆகும்.

Related image

1. கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யது நுளம்பை விரட்டலாம்.

2. புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் நுளம்பு பறந்துவிடும்.

Image result for coconut and olive oil

3. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும்; நுளம்பு நெருங்காது.

4. வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை நுளம்பு விரட்டியாகப் பயன்படுத்தலாம். அதனுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம்.

5. யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் நுளம்பு வீட்டினுள் நுழையாது.

Related image

6. பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் நுளம்பு வராது.

7. வேப்ப எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவது தெளிக்கலாம்.

Image result for natural mosquito control

8. எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதில் ஆங்காங்கு கிராம்பை நட்டு வையுங்கள். இதன் வாசனை நுளம்பை விரட்டும். ஆஸ்துமா நோயாளிகள் நுளம்பை விரட்ட, புகை போடுவதைத் தவிர்ப்பது நல்லது.

Source : Tamil Times