Latest Updates

இந்தியாவில் பலத்த மழை : 9 பேர் பலி..!

201710141037290821_1_bengaluru._L_styvpf

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை 5:30 மணி முதல் இரவு 7 மணிவரை பலத்த இடி, மின்னலுடன் கடும் மழை பொழிந்ததாகவும், இதனால் ராஜாஜி நகர், மடிவாலா, சாந்தி நகர், கோரமங்களா, சிவாஜி நகர், ஹெப்பால், எலகங்கா, இந்திரா நகர், மல்லேஸ்வரம், ஸ்ரீராமபுரம், குருபரஹள்ளி, மெஜஸ்டிக், ஜெய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

201710141037290821_9-killed-due-to-heavy-rains-in-Bengaluru_SECVPF

பல இடங்களில் சுவர்கள் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அனர்தங்களினால் மாத்திரம் நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Source : Daily Ceylon