Tuesday, October 17, 2017

மேலும் 9,000 ஆசிரியர்களுக்கு ஜனவரியில் இடமாற்றம்..!

Related image

10 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக தேசிய பாடசாலைகளில் கடமையாற்றிய 3000 ஆசிரியர்களுக்கு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

353 தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் 37,000 ஆசிரியர்களில் சுமார் 12,000 பேர் ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றுவதாகவும் , இதனை அடிப்படையாகக் கொண்டு உயர்தர வகுப்புக்களுக்கான 3000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் ஜனவரி மாதம், தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் கற்பிக்கும் 9000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் கல்வி அமைச்சினால் ஆசிரியர்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த இடமாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கமும், இலங்கை ஆசிரியர் சங்கமும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் கருத்தை மறுத்துள்ள கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சுயாதீன குழுவொன்றின் ஊடாகவே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source : Daily Ceylon
SHARE

0 coment�rios: