மன்னார் கல்வி வலயத்தில், நானாட்டான் கல்வி கோட்டத்தின் கீழ் உள்ள மன்/ புதுவெளி அ.மு.க பாடசாலையில் இன்று (10/10/2017) காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை மாணவர் பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
மன்/புதுவெளி அ.மு.க.பா மாணவர் பாராளுமன்றமானது
பாடசாலையின் அதிபர் திரு. ராஜன் குரூஸ் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் குடியியற்கல்வி பாட ஆசிரியரான திரு A. முஸ்அப் தலைமையில், மற்றும் திருமதி U. கிருஸ்துதாஸ், திரு S நஸீல் போன்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன், சபாநாயகரின் வருகையுடன் உத்தியோகபூர்வமாக சபை ஆரம்பமாகியது. இதன்போது, ஒவ்வொரு அமைச்சுக்களும் தமது பிரேரணைகளை சமர்ப்பித்ததுடன், சில ஆரோக்கியமான பிரதி வாதங்களும் நடைபெற்றது .
மாணவர்களுக்கு இறைமை, சனநாயகம், வாக்களிப்பு, சட்டம், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினை கள் போன்ற தெளிவு மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலே மாணவர் பாராளுமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்: A. முஸ்அப்