Latest Updates

உலக சிறுவர் தினம் இன்று..!


Related image

“சர்வதேச சிறுவர் தினம்” ஒக்டோபர் முதலாம் திகதியான இன்று கொண்டாடப்படுகின்றது.

இத்தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவர்களாவர்.  கடந்த 2016 ஆம் ஆண்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையில் 5 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் 4.6 மில்லியன் பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 வயதுக்குக் கீழ் சிறுவரை வேலைக்கமர்த்தலுக்கு எதிராக இலங்கையில் பல சட்டங்கள் இருந்தபோதிலும், 10 இலட்சம் சிறுவர், உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 இலட்சம் சிறுவர் தெருவில் நிர்க்கதிக்குள்ளாகின்றனர். ஒடுக்கப்படுவதன் காரணமாக இளங் குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் சிறுவர்கள் அரசியல் பொருளாதார நெருக்கடி நிலைமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக வாழும் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source : Daily Ceylon

No comments