Latest Updates

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு ஜனாதிபதி அன்பளிப்பு.



வரலாற்றில் முதல் முறையாக கலேவல கல்வி வலயத்தின் பஹல திக்கல ஆரம்ப பாடசாலையில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவி பி.டி.துலாஞ்சலி மதுமாலி பிரேமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலத்தில் நேற்று  இடம்பெற்ற இந்த சந்திப்பில் மாணவியின் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி , அவரது உயர்கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும்வரை மாதாந்தம் 3000 ரூபாவை வழங்குவதாக உறுதியளித்தார்.

தந்தையை இழந்து உரிய வீட்டு வசதியுமின்றி மிகுந்த பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் துலாஞ்சலி மதுமாலி 168 புள்ளிகளைப்பெற்று 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை சித்தியடைந்துள்ளார்.

துலாஞ்சலி மதுமாலி என்ற மாணவிக்கு புதிய வீடொன்றை அமைத்துக்கொடுக்க இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

மாணவி துலாஞ்சலி மதுமாலிக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் பரிசில்களையும் ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.

பஹல திக்கல ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் ஆகின்றன. தற்போது பாடாசலையில் 96 மாணவர்கள் உள்ளனர். இப்பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரேயொரு மாணவி பி.டி.துலாஞ்சலி மதுமாலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் பாடசாலை அதிபர் சோமசிறி அத்தநாயக்க, கலேவெல வலயக் கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி, துலாஞ்சலி மதுமாலி பிரேமரத்னவின் தாயார் கலந்துகொண்டனர்.

Source : News.lk