Latest Updates

பெற்றோரை தெளிவுபடுத்தும் செயற்திட்டம் பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

Image result for maithripala sirisena

பிள்ளைகளை பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதுடன், பரீட்சை பெறுபேறுகள் வந்தவுடன் சில பெற்றோர் பிள்ளைகள் மீது பிரயோகிக்கும் மோசமான பண்பற்ற பிரதிபலிப்பு தொடர்பில் பெற்றோரை தெளிவுபடுத்தும் செயற்திட்டம் பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் 165 ஆவது பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் நாட்டில் ஏற்படும் அவ்வாறான பல சம்பவங்களை நினைவூட்டிய ஜனாதிபதி, போட்டி மனப்பாங்கு இன்றி பிள்ளைகளின் உள்ளம், உணர்வுகள் விடயத்தில் கவனம் செலுத்துவது தொடர்பிலும் பெற்றோரை தெளிவுபடுத்த வேண்டுமென தெரிவித்தார்.
போதைப்பொருள், தொழில்நுட்பத்தின் மோசமான பக்கம் போன்றவை இன்று ஒழுக்கம், நன்நடத்தை மற்றும் பண்பான சமூகத்தை கட்டியெழுப்புவதில் பாரிய சவாலாக இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அது தொடர்பில் அனைத்து பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Source : Daily Ceylon