உயர் கல்வித் தகைமையுடைய தாய்மாரை சேவையில் இணைத்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற முடியும்.

Image result for lab worker

குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு வசதிகளை விரிவுபடுத்தல் மற்றும் விருத்தி செய்தல் (விடய இல. 10)

சாதாரண விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உயர் தரத்திலான குழந்தைகள் பகல் நேர பாதுகாப்பு வசதிகளை நாட்டினுள் அபிவிருத்தி செய்வதன் மூலம், விசேடமாக உயர் கல்வி மட்டத்தினைக் கொண்ட குறிப்பிடத்தக்களவு மகளீரின் பங்களிப்பினை நாட்டின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக பயன்படுத்த முடியும் என்பதால் இப்பிரிவினை மேலும் விருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் இணங்கண்டுள்ளது.

மகளீர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற 1,200 பகல் நேர பாதுகாப்பு நிலையங்களில் 24,000 சிறுவர்கள் பாராமரிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இத்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு இலங்கையில் சிறுவர் பகல் நேர பாதுகாப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது, விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அரச, மாகாண சபைகள், அரச சார்பற்ற மற்றும் தனியார் ஆகிய துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை நியமிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

- அமைச்சரவை முடிவுகள் (2017.10.17)

Previous Post Next Post