Latest Updates

ஜனாதிபதியை சந்தித்த ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா.



ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமி பதுளையிலிருந்து தனது பெற்றோருடன் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்கும் வரை ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று அச்சிறுமி நம்பியிருக்கவில்லை.

தன்னை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் சிறுமியொருவர் ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் இருப்பதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தனது வேலைப்பழுவின் மத்தியிலும் தன்னை சந்திப்பதற்காக வந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்ற ஜனாதிபதி தவறவில்லை.

அச்சிறுமியின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியது மட்டுமன்றி, பதுளைக்கு வரும் சந்தர்ப்பத்தில் மீண்டும் அவரை சந்திப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தமை அச்சிறுமியின் மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளது.

Source : News.lk