Latest Updates

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!


Image result for nobel prize for peace 2017

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சர்வதேச அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வந்த International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பிற்கு குறித்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Image result for nobel prize for peace 2017

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் அசாதாரண சூழலை தடுக்கவும், அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கவும் போராடியதற்காக இந்த நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அணுஆயுதங்களை தடை செய்வதற்கான தொடர் முயற்சியிலும் ICAN அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

அணுஆயுத போரினால் ஏற்படும் விளைவுகளையும், துயரங்களையும் ICAN அமைப்பு தொடர் பிரச்சாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source : Daily Ceylon

No comments