Latest Updates

விழிப்புலனற்ற பட்டதாரிகள் பேரவைக்கு ஜனாதிபதி நிதி உதவி.


சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் கொடி விற்பனை வாரத்தை ஆரம்பித்துவைக்கும் வகையில் முதலாவது கொடி இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது.

இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரிகள் பேரவையின் தலைவர் சரத்குமார மடுகஸ்வத்தவினால் ஜனாதிபதிக்கு கொடி அணிவிக்கப்பட்டதுடன், சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் விழிப்புலனற்றவர்களுக்கு வெள்ளைப் பிரம்புகள் வழங்கிவைக்கப்பட்டன.
விழிப்புலனற்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அப்பிரச்சினைகள் உள்ளடங்கிய ஒரு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

விழிப்புலனற்றவர்களின் தேவைக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் கேட்போர்கூட நிர்மாணப்பணிகளை நிறைவு செய்வதற்கு 17 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக பேரவையினால் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, அக்கட்டிடத்தைத் துரிதமாக நிர்மாணிப்பதற்கு 20
இலட்சம் ரூபாவை ஜனாதிபதி அவ்விடத்திலேயே பேரவையிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரிகள் பேரவையின் தலைவர் சரத்குமார மடுகஸ்வத்த, செயலாளர் பத்மகுமாரி கருணாதிலக்க உள்ளிட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Source : Daily Ceylon